அல்-முக்தஸர்
لِلْفُقَرَآءِ ٱلَّذِينَ أُحْصِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِى ٱلْأَرْضِ يَحْسَبُهُمُ ٱلْجَاهِلُ أَغْنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَـٰهُمْ لَا يَسْـَٔلُونَ ٱلنَّاسَ إِلْحَافًا ۗ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ﴿٢٧٣﴾
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (போர்) செய்வதனால் வாழ்வாதாரம் தேடுவதற்கு பயணம் மேற்கொள்ளமுடியாத ஏழைகளுக்குச் செலவுசெய்யுங்கள். அவர்கள் மக்களிடம் கையேந்தாமல் தன்மானத்தோடு இருப்பதால் அறியாதவன் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணிவிடுவான். அவர்களது உடலிலும் உடையிலும் தென்படும் வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அவர்களைக் காண்பவர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மற்ற ஏழைகளைப்போல மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். செல்வம் மற்றும் அது அல்லாத எதை நீங்கள் செலவுசெய்தாலும் அல்லாஹ் அதனை நன்கறிந்தவன். அதற்காக அவன் உங்களுக்குப் பெரும் கூலியை வழங்கிடுவான்.