அல்-முக்தஸர்
يُؤْتِى ٱلْحِكْمَةَ مَن يَشَآءُ ۚ وَمَن يُؤْتَ ٱلْحِكْمَةَ فَقَدْ أُوتِىَ خَيْرًا كَثِيرًا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ ﴿٢٦٩﴾
அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு சீரான சொல்லையும் சரியான செயலையும் வழங்குகிறான். யாருக்கு இது வழங்கப்பட்டதோ அவர் பெரும் நன்மைகளைப் பெற்றவராவார். அல்லாஹ்வின் ஒளியின் மூலம் பயன்பெற்று அவனது நேர்வழியையும் பெற்ற முழுமையான சிந்தனையுடையோரே அவனது வசனங்களைக் கொண்டு அறிவுரை பெற்றுக்கொள்வர்.