×

البقرة

வசனம் 261

அல்-முக்தஸர்

مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍ مِّا۟ئَةُ حَبَّةٍ ۗ وَٱللَّهُ يُضَـٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴿٢٦١﴾

தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் நம்பிக்கையாளர்களின் நன்மைக்கு உதாரணம், ஒரு விதையைப் போன்றதாகும். விவசாயி அதனை நல்ல பூமியில் விதைக்கிறான். அது ஏழு கதிர்களை விளைவிக்கிறது. ஒவ்வொரு கதிரும் நூறு விதைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடிய அடியார்களுக்கு நன்மைகளை கணக்கின்றி, பன்மடங்காக வழங்குகிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன். அதற்குத் தகுதியானவர்களை நன்கறிந்தவன்.