×

البقرة

வசனம் 259

அல்-முக்தஸர்

أَوْ كَٱلَّذِى مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْىِۦ هَـٰذِهِ ٱللَّهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِا۟ئَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُۥ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِا۟ئَةَ عَامٍ فَٱنظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَٱنظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةً لِّلنَّاسِ ۖ وَٱنظُرْ إِلَى ٱلْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعْلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿٢٥٩﴾

அல்லது அழிந்துகிடந்த ஒரு ஊரை கடந்து சென்றவரை உமக்குத் தெரியுமா? அங்குள்ள கட்டிடங்கள் வீழ்ந்து வசிப்பவர்கள் அழிந்து அந்த ஊர் பாழடைந்து வெருச்சோடிக் கிடந்தது. அந்த மனிதர் ஆச்சரியமாகக் கேட்டார்: இந்த ஊரில் உள்ளவர்கள் இறந்தபிறகு அல்லாஹ் அவர்களை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?! அல்லாஹ் அவரை நூறுவருடங்கள்வரை மரணிக்கச் செய்தான். பின்னர் உயிர்கொடுத்து எழுப்பி அவரிடம் கேட்டான்: நீர் எவ்வளவு காலங்கள் இறந்தநிலையில் இருந்தீர்? அதற்கு அவர், ஒருநாள் அல்லது ஒருநாளின் சிலபகுதிவரை இருந்திருப்பேன் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்: நீர் நூறுஆண்டுகள்வரை இவ்வாறு இருந்தீர். உம்முடன் வைத்திருந்த உணவையும் பானத்தையும் பாரும். அவை மிக விரைவாக மாறும் தன்மையுடையவையாக இருந்தும் மாறாமல் அதே நிலையிலேயே இருக்கின்றன. உம்முடைய இறந்த கழுதையையும் பாரும். உயிர்கொடுத்து எழுப்புவதில் மக்களுக்கு அல்லாஹ்வின் ஆற்றலைக் காட்டும் ஒரு தெளிவான அத்தாட்சியாக உம்மை நாம் ஆக்கும் பொருட்டு சிதைந்து கிடக்கின்ற எலும்புகளையும் அவற்றை நாம் எவ்வாறு ஒன்றோடொன்று சேர்த்து அதன்மீது சதையைப்போர்த்தி அதற்கு உயிரளிக்கின்றோம் என்பதையும் பாரும் என்று கூறினான். அவர் அதனைப் பார்த்தபோது உண்மையைக் கண்டுகொண்டார்; அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொண்டார். அதனை ஒத்துக் கொண்டவராகக் கூறினார்: அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிந்துகொண்டேன்.