×

البقرة

வசனம் 249

அல்-முக்தஸர்

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ ۚ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ ۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ ٱللَّهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ ﴿٢٤٩﴾

தாலூத் படைகளுடன் ஊரைவிட்டுக் புறப்பட்டபோது அவர்களிடம் கூறினார்: அல்லாஹ் ஒரு ஆற்றைக்கொண்டு உங்களைச் சோதிப்பான். அதிலிருந்து நீரை அருந்துபவர் என் வழிமுறையைச் சார்ந்தவர் அல்ல. அவர் என்னுடன் சேர்ந்து போரிடக்கூடாது. அதிலிருந்து யார் நீர் அருந்தவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர்; போரில் என்னுடன் பங்குகொள்வார். ஆயினும் நிர்ப்பந்தத்தில் ஒரு பிடி அளவுக்கு நீர் அருந்திக் கொள்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. கடுமையான தாகம் இருந்தபோதும் அவர்களில் அருந்தாது பொறுமையாக இருந்த சிலரைத்தவிர படையினர் அனைவரும் அதிலிருந்து நீர் அருந்திவிட்டனர். தாலூத்தும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அந்த ஆற்றைக் கடந்தபோது அவர்களில் சிலர் கூறினார்கள்: இன்று ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் போரிட எங்களிடம் சக்தி இல்லை. அப்போது மறுமைநாளில் அல்லாஹ்வை உறுதியாகச் சந்திப்போம் என்று உறுதியாக நம்பியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட, குறைந்த எண்ணிக்கையுடைய எத்தனையோ சிறுகூட்டங்கள் அல்லாஹ்வை நிராகரித்த பெரும் எண்ணிக்கையுடைய கூட்டங்களை அவனுடைய அனுமதிகொண்டு அவனுடைய உதவியால் வென்றிருக்கின்றன. அல்லாஹ்வின் உதவி ஈமானைக்கொண்டே கிடைக்குமே அன்றி அதிக எண்ணிக்கையைக் கொண்டு அல்ல. அல்லாஹ் தன் அடியார்களில் பொறுமையாளர்களுக்கு ஆதரவளிப்பவனாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கின்றான்.