×

البقرة

வசனம் 247

அல்-முக்தஸர்

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ٱللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا ۚ قَالُوٓا۟ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِٱلْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ ٱلْمَالِ ۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ وَزَادَهُۥ بَسْطَةً فِى ٱلْعِلْمِ وَٱلْجِسْمِ ۖ وَٱللَّهُ يُؤْتِى مُلْكَهُۥ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴿٢٤٧﴾

அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்களுக்கு தாலூத்தை அரசராக நியமித்துள்ளான். நீங்கள் அவருடைய தலைமையில் போர்புரிய வேண்டும். அவர்களின் தலைவர்கள் இதனை ஆட்சேபித்தவர்களாகக் கூறினார்கள்: அவர் எப்படி எங்களை ஆட்சிசெலுத்த முடியும்? அவரைவிட நாங்கள்தாம் அரசாட்சிக்குத் தகுதியானவர்கள். அவர் அரச வாரிசுகளில் உள்ளவராகவும் இல்லை; ஆட்சிசெய்யும் அளவு பெருஞ்செல்வம் படைத்தவராகவும் இல்லையே!. அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களைவிட அவருக்கு விசாலமான கல்வியையும் உடல்பலத்தையும் வழங்கியிருக்கிறான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தன் அருளால், அறிவால் ஆட்சியதிகாரத்தை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமான அருளாளன். தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். தன் படைப்புகளில் அதற்குத் தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.