அல்-முக்தஸர்
مَّن ذَا ٱلَّذِى يُقْرِضُ ٱللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَـٰعِفَهُۥ لَهُۥٓ أَضْعَافًا كَثِيرَةً ۚ وَٱللَّهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٢٤٥﴾
தன் செல்வத்தை நல்லெண்ணத்துடனும், தூய உள்ளத்துடனும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்து கடனளிப்பவரின் செயலைச் செய்பவர் யார்? அல்லாஹ் அவருக்குப் பன்மடங்காக்கித் தருவான். வாழ்வாதாரத்திலும் ஆரோக்கியத்திலும், இன்னபிற விஷயங்களிலும் அல்லாஹ்வே நெருக்கடியையும் விசாலத்தையும் ஏற்படுத்துகிறான். மறுமையில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கிடுவான்.