அல்-முக்தஸர்
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَـٰرِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ ٱلْمَوْتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُوا۟ ثُمَّ أَحْيَـٰهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ ﴿٢٤٣﴾
தூதரே! தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களின் செய்தி உமக்குத் தெரியாதா? கொள்ளை நோயினாலோ பிற விஷயங்களினாலோ மரணத்திற்கு அஞ்சிய அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அவர்கள் இஸ்ராயீன் மக்களைச் சேர்ந்த ஒரு பிரிவினர். அல்லாஹ் அவர்களிடம்: "மரணமடையுங்கள்" என்று கூறினான். எனவே அவர்கள் மரணமடைந்தார்கள். பின்னர் அதிகாரம் அனைத்தும் தன் கைவசமே உள்ளது என்பதையும் அவர்கள் தங்களுக்குப் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக அவன் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது பேரருள் புரிபவன். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதில்லை.