×

البقرة

வசனம் 228

அல்-முக்தஸர்

وَٱلْمُطَلَّقَـٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَـٰثَةَ قُرُوٓءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ ٱللَّهُ فِىٓ أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذَٰلِكَ إِنْ أَرَادُوٓا۟ إِصْلَـٰحًا ۚ وَلَهُنَّ مِثْلُ ٱلَّذِى عَلَيْهِنَّ بِٱلْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٢٨﴾

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதற்கிடையில் அவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக்கூடாது; தங்கள் வயிற்றில் அல்லாஹ் உருவாக்கிய கருவையும் மறைத்துவிடக்கூடாது. அவர்களை விவாகரத்து செய்த கணவன்மார்கள் இணக்கத்தை நோக்கமாகக்கொண்டு அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ள நாடினால் காத்திருக்கும் குறிப்பிட்ட காலஇடைவெளிக்குள் அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கு அக்கணவன்மார்களே மிகத்தகுதியானவர்கள். கணவர்களுக்கு இருப்பதைப்போல மனைவியருக்கும் மக்களுக்கு மத்தியில் வழமையில் இருக்கும் உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. நிர்வகித்தலிலும் விவாகரத்து விஷயங்களிலும் பெண்களைவிட ஆண்களுக்கு ஒருபடி உயர்வு உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் திட்டமிடலிலும், சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன்.