அல்-முக்தஸர்
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَـٰقُوهُ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ ﴿٢٢٣﴾
விளைச்சல்களைத் தரும் நிலத்தைப் போல் உங்களின் மனைவியர் உங்களுக்குக் குழந்தைகளைப் பெற்றுத்தரும் விளைநிலங்களாவர். எனவே உங்கள் விளைநிலமாகிய பெண்ணுறுப்பில் நீங்கள் எத்திசையிலிருந்தும் விரும்பியவாறு உறவுகொள்ளலாம். நற்செயல்களைச் செய்வதன் மூலம் உங்களுக்காக நீங்கள் சேர்த்து வையுங்கள். அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடி, நல்ல குழந்தைகளைப் பெறுவதற்காக மனைவியுடன் உடலுறவுகொள்வதும் நற்செயல்களில் உள்ளடங்கியவைதான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனைப் அஞ்சிக்கொள்ளுங்கள். மறுமைநாளில் நீங்கள் அவனைச் சந்திக்கக்கூடியவர்கள் என்பதையும் நீங்கள் அவனுக்கு முன்னால் நிற்கக்கூடியவர்கள் என்பதையும் அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். தூதரே! தங்கள் இறைவனை சந்திக்கும்போது, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிரந்தர இன்பம் மற்றும் அவனுடைய திருமுகத்தைக் காணுதல் ஆகியவற்றைக் கொண்டு நம்பிக்கைகயாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.