×

البقرة

வசனம் 219

அல்-முக்தஸர்

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَآ إِثْمٌ كَبِيرٌ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ ٱلْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ ﴿٢١٩﴾

தூதரே! உம்முடைய தோழர்கள் போதயை உண்டுபன்னும் மதுபானம் அருந்துவது, விற்பது வாங்குவது குறித்தும், சூதாட்டத்தைக் குறித்தும் உம்மிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக:அவையிரண்டும் மார்க்க மற்றும் உலகியல்ரீதியாக ஏராளமான தீங்குகளை உடையவை. அவை அறிவை மழுங்கடித்துவிடும்; செல்வத்தைப் போக்கிவிடும்; உங்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிடும். அவையிரண்டிலும் பொருளாதார ரீதியான சில பயன்களும் இருக்கின்றன. அவற்றால் ஏற்படும் பயன்களைவிட தீங்குகளும் பாவங்களுமே அதிகமானது. எதனுடைய தீங்கு பயனைவிட அதிகமாக இருக்கின்றதோ அறிவாளி அதனைவிட்டும் தவிர்ந்திருப்பார். இது போதைப்பொருட்களை தடைசெய்வதற்கான ஆரம்பக்கட்ட அறிவுரையாகும். தூதரே! உம்முடைய தோழர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து உபரியாக எதைச் செலவுசெய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: உங்களின் தேவைபோக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் (இது ஆரம்பத்தில் இறக்கப்பட்ட கட்டளையாகும். பின்னர் அல்லாஹ் குறித்த பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளையுடைய ஸகாத்தை கடமையாக்கினான்). நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, இதுபோன்ற சந்தேகமற்ற, தெளிவான போதனைகளைக் கொண்டு அல்லாஹ் மார்க்கத்தின் சட்டங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.