×

البقرة

வசனம் 215

அல்-முக்தஸர்

يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ﴿٢١٥﴾

தூதரே! உம்முடைய தோழர்கள், அவர்களின் செல்வங்களில் எதைச் செலவுசெய்ய வேண்டும்? யாருக்கு வழங்க வேண்டும்? என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: நீங்கள் தூய்மையான எந்த செல்வத்தைச் செலவு செய்தாலும் உங்களின் தாய்தந்தையருக்காக, தேவைக்கேற்ப நெருங்கிய உங்களின் உறவினருக்காக, தேவையுடைய அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, நாட்டையும் குடும்பத்தையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக செலவு செய்யுங்கள்.முஃமின்களே! குறைவாகவோ அதிகமாகவோ நீங்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.