×

البقرة

வசனம் 207

அல்-முக்தஸர்

وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ ﴿٢٠٧﴾

மனிதர்களில் நம்பிக்கைகொண்ட சிலர் தனது இறைவனுக்குக் கட்டுப்பட்டு, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்தவாறு, அவனுடைய திருப்தியைத் தேடியவாறு தம் உயிரை வழங்குகின்றார்கள். அல்லாஹ் தன் அடியார்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.