×

البقرة

வசனம் 198

அல்-முக்தஸர்

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَآ أَفَضْتُم مِّنْ عَرَفَـٰتٍ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ عِندَ ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِ ۖ وَٱذْكُرُوهُ كَمَا هَدَىٰكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ ﴿١٩٨﴾

ஹஜ் செய்யும்போது வியாபாரத்தின் மூலமோ இன்னபிற விஷயங்களின் மூலமோ நீங்கள் ஹலாலான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அரஃபாவில் ஒன்றுகூடிய பிறகு பத்தாவது நாள் இரவு முஸ்தலிஃபாவை நோக்கி நீங்கள் சென்றால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். முஸ்தலிஃபாவிலுள்ள மஷ்அருல் ஹராமிற்கு பிரதான அடையாளங்கள், ஹஜ் வணக்கவழிபாடுகள் என்பவற்றுக்கு அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னர் நீங்கள் அவனுடைய மார்க்கத்தை அறியாது இருந்தீர்கள்.