×

البقرة

வசனம் 191

அல்-முக்தஸர்

وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚ وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ ۚ وَلَا تُقَـٰتِلُوهُمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ حَتَّىٰ يُقَـٰتِلُوكُمْ فِيهِ ۖ فَإِن قَـٰتَلُوكُمْ فَٱقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَـٰفِرِينَ ﴿١٩١﴾

அவர்களை சந்திக்கும் இடங்களில் கொல்லுங்கள். அவர்கள் உங்களை வெளியேற்றிய மக்காவிலிருந்து அவர்களையும் வெளியேற்றுங்கள். ஒரு நம்பிக்கையாளனை அவனுடைய மார்க்கத்தை விட்டுத் தடுத்து நிராகரிப்பின் பக்கம் கொண்டு செல்லும் குழப்பம் கொலையை விடக்கொடியது. மஸ்ஜிதுல் ஹராமை கண்ணியப்படுத்தும் பொருட்டு அங்கு அவர்களாகவே போரைத் தொடங்கும்வரை நீங்கள் போரைத் தொடங்காதீர்கள். அவர்கள் போரைத் தொடங்கிவிட்டால் அவர்களைக் கொல்லுங்கள். மஸ்ஜிதுல் ஹராமில் வரம்புமீறியதற்கு கொலையே நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும்.