×

البقرة

வசனம் 183

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٣﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப்போல உங்கள்மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கும் அவனுடைய தண்டனைக்குமிடையே நற்செயல்களால் தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த நற்செயல்களில் மிகச் சிறந்தது நோன்பாகும்.