அல்-முக்தஸர்
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا۟ مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعْمَـٰلَهُمْ حَسَرَٰتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُم بِخَـٰرِجِينَ مِنَ ٱلنَّارِ ﴿١٦٧﴾
பின்பற்றியவர்கள், பலவீனமானவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டும் எமது தலைவர்கள் விலகிக்கொண்டதைப்போல் நாங்களும் அவா்களை விட்டு விலகுவதற்கு உலகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கக்கூடாதா? மறுமையில் அல்லாஹ் அவர்களுக்கு கடுமையான வேதனையைக் காட்டியதுபோல், அசத்தியத்தில் இருந்த தலைவர்களைப் பின்பற்றியதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கவலைகளாக, கைசேதங்களாக அனுபவிக்கச்செய்வான். அவர்கள் நரகத்திலிருந்து ஒருபோதும் வெளியேற முடியாது.