அல்-முக்தஸர்
إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَـٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱلْفُلْكِ ٱلَّتِى تَجْرِى فِى ٱلْبَحْرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٍ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍ وَتَصْرِيفِ ٱلرِّيَـٰحِ وَٱلسَّحَابِ ٱلْمُسَخَّرِ بَيْنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ ﴿١٦٤﴾
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், அவற்றிலுள்ள அபுர்வ படைப்புக்களிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய உணவுப்பொருட்கள், வியாபாரப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை சுமந்துகொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கி, விளையும் பயிா்கள் மூலம் பூமியை உயிர்ப்பிக்கும் நீரிலும், இந்த உலகத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய உயிரினங்களிலும், ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு அவன் காற்றை வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்படுத்தப்பட்டுள்ள மேகங்களிலும் ஆதாரங்களைப் புரிந்துகொள்ளும் மக்களுக்கு, அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன.