×

البقرة

வசனம் 160

அல்-முக்தஸர்

إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَبَيَّنُوا۟ فَأُو۟لَـٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ۚ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿١٦٠﴾

ஆயினும் தெளிவான சான்றுகளை மறைத்ததற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, தங்களின் வெளிப்படையான, அந்தரங்கமான செயல்களைச் சீர்படுத்தி, மறைத்த சத்தியத்தையும், நேர்வழியையும் தெளிவுபடுத்தியவர்களைத்தவிர. இவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்வேன். நான் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.