அல்-முக்தஸர்
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا۟ يَأْتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًا ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿١٤٨﴾
ஒவ்வொரு சமூகத்திற்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஒரு முன்னோக்கு திசை இருக்கின்றது. எனவே அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சட்டங்களும், கிப்லாவும் வெவ்வெறாக இருக்கின்றன. அவை அல்லாஹ்வின் சட்டங்களாக, கட்டளைகளாக இருக்கும்வரை அவர்களின் வெவ்வேறுதிசைகள் எந்தத் தீங்கையும் அளிக்காது. எனவே நம்பிக்கையாளர்களே, உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட நற்செயல்களை விரைந்து செய்யுங்கள். உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அவன் ஒவ்வொன்றின்மீதும் பேராற்றலுடையவன். உங்களை ஒன்று சேர்ப்பதும் கூலிவழங்குவதும் அவனால் முடியாத காரியமல்ல.