அல்-முக்தஸர்
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِى ٱلسَّمَآءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَىٰهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ ۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ لَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ ﴿١٤٤﴾
தூதரே! நீர் விரும்பும் திசைக்கு கிப்லா மாற்றப்படும் வஹி இறங்குவதை எதிர்பார்த்தவராக உமது முகமும், பார்வையும் வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே நீர் இப்போது முன்னோக்கும் பைதுல் மக்திஸ் கிப்லாவிற்குப் பதிலாக நீர் விரும்பும் கிப்லாவான கஅபாவின் பக்கம் உம்மைத் திருப்பியே தீருவோம். எனவே உமது முகத்தை மக்காவில் அமைந்துள்ள கஅபாவின் பக்கம் திருப்புவீராக. நம்பிக்கையாளர்களே, நீங்கள் எங்கிருந்தாலும் தொழும்போது அதன் திசையை முன்னோக்கிக் கொள்ளுங்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் கிப்லா மாற்றம் அவர்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட உண்மையே என்பதை அவர்களின் வேதத்தின் மூலம் நன்கறிவார்கள். சத்தியத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவன் அவற்றை நன்கறிவான். அதற்கு அவர்களுக்கு கூலியும் வழங்குவான்.