×

البقرة

வசனம் 14

அல்-முக்தஸர்

وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ إِلَىٰ شَيَـٰطِينِهِمْ قَالُوٓا۟ إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُونَ ﴿١٤﴾

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்தித்தால் அவர்களுக்குப் பயந்து, நீங்கள் நம்பிக்கைகொண்டது போல் நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம் என்று கூறுகிறார்கள். அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்று தங்களின் தலைவர்களுடன் தனித்திருக்கும்போதோ, நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். அவர்களைப் பரிகாசம் செய்வதற்காகத்தான் வெளிப்படையில் அவர்களுடன் ஒத்துப்போகின்றோம் எனக் கூறி தங்களின் விசுவாசத்தை அவர்களிடம் உறுதிப்படுத்துகிறார்கள்.