×

البقرة

வசனம் 139

அல்-முக்தஸர்

قُلْ أَتُحَآجُّونَنَا فِى ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَآ أَعْمَـٰلُنَا وَلَكُمْ أَعْمَـٰلُكُمْ وَنَحْنُ لَهُۥ مُخْلِصُونَ ﴿١٣٩﴾

தூதரே! நீர் கூறுவீராக, வேதக்காரர்களே, உங்களின் மார்க்கமும் வேதமும் எங்களைவிட முந்தியது என்பதால் நீங்கள்தாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எங்களைவிட நெருங்கியவர்கள் என்று கூறுகிறீர்களா? நிச்சயமாக இவை உங்களுக்குப் பயன்தராது. அல்லாஹ்தான் நம் அனைவரின் இறைவன். நீங்கள் மட்டும் அவனை சொந்தம் கொண்டாட முடியாது. எங்களுக்கு எங்களின் செயல்கள். அதைக்குறித்து நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். அதைக்குறித்து நாங்கள் கேட்கப்பட மாட்டோம். ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். நாங்கள் வணக்க வழிபாட்டையும் கீழ்ப்படிதலையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குகின்றோம். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம்.