×

البقرة

வசனம் 137

அல்-முக்தஸர்

فَإِنْ ءَامَنُوا۟ بِمِثْلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا هُمْ فِى شِقَاقٍ ۖ فَسَيَكْفِيكَهُمُ ٱللَّهُ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ ﴿١٣٧﴾

நீங்கள் நம்பிக்கைகொண்டது போன்று யூதர்களும், கிருஸ்தவர்களும் நம்பிக்கைகொண்டால் அவர்கள் அல்லாஹ் தேர்ந்தெடுத்த நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள் இறைத்தூதர்களை நிராகரித்தால் அல்லது அவர்களில் சிலரை நிராகரித்தால் அவர்கள் பகைமையிலும் முரண்பாட்டிலும் இருப்பவர்களாவர். தூதரே, நீர் கவலைகொள்ளாதீர். அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவர்களின் தீங்குகளிலிருந்து அவனே உம்மைப் பாதுகாப்பான்; அவர்களுக்கு எதிராக உமக்கு உதவிசெய்வான். அவர்கள் பேசும் விஷயங்களை அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்; அவர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.