×

البقرة

வசனம் 130

அல்-முக்தஸர்

وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُۥ ۚ وَلَقَدِ ٱصْطَفَيْنَـٰهُ فِى ٱلدُّنْيَا ۖ وَإِنَّهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ ﴿١٣٠﴾

மடமையினாலும் சத்தியத்தை விட்டு அசத்தியத்தை எடுத்து தவறான திட்டமிடலினாலும் தனக்குத்தானே அநியாயம் இழைத்துக்கொண்டவனையும் இழிவை ஏற்றுக்கொண்டவனையும் தவிர வேறு எவரும் இப்ராஹீமின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கங்களின் பக்கம் செல்லமாட்டான். நாம் இவ்வுலகில் இப்ராஹீமை தூதராகவும், உற்ற நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மறுமையில் அவர், இறைவன் விதித்த கடமைகளை நிறைவேற்றி, உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நல்லவர்களுடன் அவர் இருப்பார்.