அல்-முக்தஸர்
رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿١٢٨﴾
எங்கள் இறைவனே, உனக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களாக எங்களை ஆக்குவாயாக. நாங்கள் உனக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம். எங்களின் சந்ததியிலிருந்து உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவாயாக. உன்னை வணங்கும் முறையை எமக்கு கற்றுத்தருவாயாக!. எங்களின் பாவங்களையும், வணக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளையும், மன்னித்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றாய். அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றாய்.