அல்-முக்தஸர்
وَقَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوْ تَأْتِينَآ ءَايَةٌ ۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّثْلَ قَوْلِهِمْ ۘ تَشَـٰبَهَتْ قُلُوبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يُوقِنُونَ ﴿١١٨﴾
வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் அறியாதவர்கள் சத்தியத்தை எதிர்த்தவர்களாகக் கூறுகிறார்கள், “அல்லாஹ் ஏன் எங்களுடன் நேரடியாகப் பேசவில்லை? அல்லது எமக்கென பிரத்யேகமானதொரு புலன் ரீதியான அற்புதத்தை ஏன் எங்களுக்குத் தரவில்லை?.” இதற்கு முன்னர் தம் தூதர்களை நிராகரித்த சமூகமும் இவ்வாறே கூறியது. அவர்களின் காலங்களும் இடங்களும் வெவ்வேறாக இருந்தாலும் இவர்களின் உள்ளங்களும் இவர்களுக்கு முன்னர் நிராகரித்து முரண்பட்டோரின் உள்ளங்களும் நிராகரிப்பு, பிடிவாதம், அத்துமீறல் போன்றவற்றில் ஒன்றுபட்டுவிட்டன. தமக்குச் சத்தியம் தெரியும்போது அதன் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோருக்கு சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். எந்தச் சந்தேகமும் அவர்களை அண்டவில்லை; பிடிவாதம் அவர்களைத் தடுக்கவில்லை.