×

البقرة

வசனம் 114

அல்-முக்தஸர்

وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَـٰجِدَ ٱللَّهِ أَن يُذْكَرَ فِيهَا ٱسْمُهُۥ وَسَعَىٰ فِى خَرَابِهَآ ۚ أُو۟لَـٰٓئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَآ إِلَّا خَآئِفِينَ ۚ لَهُمْ فِى ٱلدُّنْيَا خِزْىٌ وَلَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ﴿١١٤﴾

பள்ளிவாயில்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுப்பவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யாருமில்லை. அவன் அங்கு தொழுவதை, அல்லாஹ்வை நினைவுகூருவதை, குர்ஆன் ஓதுவதைத் தடுக்கிறான். அவற்றை இடிப்பதன் மூலமோ அவற்றில் நடைபெறும் வணக்க வழிபாட்டைத் தடுப்பதன் மூலமோ அவற்றைப் பாழாக்க முயல்கிறான். பாழாக்க முயலும் இவர்களுக்கு அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் மக்களை அவனுடைய பள்ளிவாயில்களை விட்டுத் தடுத்ததனாலும் பயந்தவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்குத் தகுதி இல்லை. இவ்வுலகில் இவர்கள் நம்பிக்கையாளர்களால் இழிவுபடுத்தப்படுவார்கள். அல்லாஹ்வின் பள்ளிவாயில்களை விட்டு மக்களைத் தடுத்ததனால் மறுமையில் பெரும் வேதனையும் உண்டு.