அல்-முக்தஸர்
وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ۚ وَمَا تُقَدِّمُوا۟ لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿١١٠﴾
தொழுகையை அதன் நிபந்தனைகளோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து தகுதியானவர்களுக்கு ஸகாத்தை வழங்குங்கள். உங்களது வாழ்வில் நீங்கள் நற்செயல்கள் செய்து இறப்பதற்கு முன்னால் உங்களின் சேமிப்புக்காக முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளுக்கான கூலியை மறுமையில் உங்கள் இறைவனிடம் பெறுவீர்கள். அதனடிப்படையில் அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் ஒவ்வொருவருக்கும் அவரது செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.