×

البقرة

வசனம் 10

அல்-முக்தஸர்

فِى قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْذِبُونَ ﴿١٠﴾

காரணம், அவர்களின் உள்ளங்களில் சந்தேகம் இருக்கிறது. அவர்களின் சந்தேகத்தை அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்திவிட்டான். செயலின் தன்மைக்கேற்பத்தான் கூலியும் வழங்கப்படும். அல்லாஹ்விடமும் மக்களிடமும் அவர்கள் பொய் கூறியதாலும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த தூதை நிராகரித்ததாலும் நரகத்தின் அடித்தளத்தில் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.