×

مريم

வசனம் 7

அல்-முக்தஸர்

يَـٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَـٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّا ﴿٧﴾

அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். “ஸகரிய்யாவே! நாம் உமக்கு நற்செய்தி கூறுகின்றோம். உமது பிரார்த்தனைக்கு நாம் விடையளித்து விட்டோம். யஹ்யா என்னும் பெயருடைய ஆண் பிள்ளையை நாம் உமக்கு வழங்குகிறோம். நாம் இதற்கு முன்னர் வேறு யாருக்கும் இந்தப் பெயரை வைத்ததில்லை” என்று அவன் அவரை அழைத்துக் கூறினான்.