அல்-முக்தஸர்
وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدْعُوا۟ رَبِّى عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّى شَقِيًّا ﴿٤٨﴾
நான் உங்களையும் அல்லாஹ்வைவிடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களையும் விட்டு பிரிந்துவிடுகிறேன். நான் என் இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்கின்றேன். அவனுக்கு இணையாக எதையும் ஆக்க மாட்டேன். அப்பொழுதுதான் நான் பிரார்த்தித்தால் அவன் மறுக்க மாட்டான். அவ்வாறு மறுத்தால் அவனைப் பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியசாலியாகி விடுவேன்.