×

مريم

வசனம் 39

அல்-முக்தஸர்

وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْحَسْرَةِ إِذْ قُضِىَ ٱلْأَمْرُ وَهُمْ فِى غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٣٩﴾

தூதரே!- மக்கள் வருத்தப்படும் நாளைக்குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அந்த நாளில் தீய செயல்கள் செய்தவன் தான் செய்த தீய செயல்களுக்காக வருத்தப்படுவான். நற்செயல்கள் செய்தவன் தான் இன்னும் அதிகமாக வழிப்பட்டு நற்செயல்கள் செய்யவில்லையே என்று வருத்தப்படுவான். அடியார்களின் பதிவேடுகள் அனைத்தும் சுருட்டப்பட்டுவிடும். அவர்களின் கணக்குகள் முடிக்கப்படும். ஒவ்வொருவரும் தான் முற்படுத்திய செயல்களின்பால் சென்றுவிடுவார்கள். அவர்களோ மறுமையின் மீது அலட்சியமாக இருக்கிறார்கள். தங்களின் உலக வாழ்வில் மயங்கியுள்ளார்கள். அவர்கள் மறுமை நாளை நம்புவதில்லை.