×

مريم

வசனம் 15

அல்-முக்தஸர்

وَسَلَـٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا ﴿١٥﴾

அவர் பிறந்த நாளிலும், மரணித்து வாழ்விலிருந்து வெளியேறும் நாளிலும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளிலும் அல்லாஹ்விடமிருந்து சாந்தியும், பாதுகாப்பும் அவருக்கு உண்டாகட்டும். இந்த மூன்று இடங்களும் மனிதன் மிகவும் அஞ்சக்கூடிய இடங்களாகும். இவற்றில் அவன் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் ஏனைய இடங்களில் எந்த அச்சமும் கொள்ளவேண்டியதில்லை.