×

الكهف

வசனம் 77

அல்-முக்தஸர்

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَآ أَتَيَآ أَهْلَ قَرْيَةٍ ٱسْتَطْعَمَآ أَهْلَهَا فَأَبَوْا۟ أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَن يَنقَضَّ فَأَقَامَهُۥ ۖ قَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا ﴿٧٧﴾

அவர்களிருவரும் நடந்துசென்றனர். ஓர் ஊரை அடைந்ததும் அவ்வூர்வாசிகளிடம் உணவு கேட்டார்கள். அவர்கள், இருவருக்கும் உணவளித்து, விருந்தினர் உரிமையை நிறைவேற்ற மறுத்துவிட்டனர். அங்கு இடிந்துவிழுவதற்குத் தயாராக இருந்த ஒரு சரிந்த சுவரைக் கண்டார்கள். களிர் அந்த சுவரைச் சரிசெய்து நிறுத்தினார். அப்போது மூஸா, “அவர்கள் நமக்கு விருந்தளிக்க மறுத்த பிறகு, நமது உணவுத் தேவைக்காக, அதனை சீர்செய்வதற்கு ஏதாவது கூலியைப் பெற நீர் விரும்பியிருந்தால் அதனை நீர் எடுத்திருக்கலாமே!” என்றார்.