×

الكهف

வசனம் 71

அல்-முக்தஸர்

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا رَكِبَا فِى ٱلسَّفِينَةِ خَرَقَهَا ۖ قَالَ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْـًٔا إِمْرًا ﴿٧١﴾

அவர்கள் இருவரும் அதில் ஒன்றுபட்டபோது கடற்கரைக்குச் சென்று ஒரு கப்பலைக் கண்டார்கள். களிருக்கு இருந்த மரியாதையால் இருவரும் எந்தக் கூலியும் அளிக்காமல் அதில் ஏறிக் கொண்டார்கள். அப்போது களிர் கப்பலின் ஒரு பலகையை கழற்றி அதில் துளையிட்டுவிட்டார். மூஸா அவரிடம் கூறினார்: “நம்மிடம் எந்தக் கூலியும் வாங்காமல் நம்மை ஏற்றிய இவர்களின் கப்பலை அதிலுள்ளவர்களை மூழ்கடித்துவிட துளையிடுகின்றீரா? நீர் ஆச்சரியமான காரியத்தை செய்துவிட்டீர்.”