அல்-முக்தஸர்
قَالَ ذَٰلِكَ مَا كُنَّا نَبْغِ ۚ فَٱرْتَدَّا عَلَىٰٓ ءَاثَارِهِمَا قَصَصًا ﴿٦٤﴾
மூஸா தம் பணியாளரிடம் கூறினார்: “நாம் அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அதுதான் அந்த நல்லடியார் வசிக்கும் இடத்தின் அடையாளம். அவர்கள் வழிதவறிவிடாமல் இருக்க தங்களின் கால் பாத அடையாளங்களை பின்பற்றி திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்த பாறையை அடைந்தார்கள். அங்கிருந்து மீனின் நுழைவாயிலை நோக்கிச் சென்றார்கள்.