அல்-முக்தஸர்
وَتِلْكَ ٱلْقُرَىٰٓ أَهْلَكْنَـٰهُمْ لَمَّا ظَلَمُوا۟ وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًا ﴿٥٩﴾
ஹூத், ஸாலிஹ், ஷுஜப் ஆகியோரின் சமூகங்கள் வாழ்ந்த ஊர்களைப் போன்ற உங்களுக்கு நெருக்கமான நிராகரித்த அந்த ஊர்களில் உள்ளோரை, பாவங்கள் மற்றும் நிராகரிப்பின் மூலம் தமக்குத் தாமே அநியாயம் செய்தபோது அழித்துவிட்டோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் வைத்திருந்தோம்.