×

الكهف

வசனம் 52

அல்-முக்தஸர்

وَيَوْمَ يَقُولُ نَادُوا۟ شُرَكَآءِىَ ٱلَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا۟ لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُم مَّوْبِقًا ﴿٥٢﴾

தூதரே!- அவர்களிடம் மறுமை நாளை நினைவு கூர்வீராக. அப்போது அல்லாஹ் இவ்வுலகில் தனக்கு இணை கற்பித்தவர்களிடம் கூறுவான்: “உங்களுக்கு உதவிசெய்வதற்காக எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்களை அழையுங்கள் என்று.” அவர்கள் தங்களின் இணைத்தெய்வங்களை அழைப்பார்கள். ஆனால் அவை அவர்களுக்குப் பதிலளிக்க மாட்டா. உதவியும் செய்யமாட்டா. வணங்கியவர்களுக்கும் வணங்கப்பட்டவர்களுக்குமிடையே நாம் அவர்கள் ஒன்று சேரும் அழிவிடத்தை ஏற்படுத்திவிடுவோம். அதுதான் நரக நெருப்பாகும்.