×

الكهف

வசனம் 50

அல்-முக்தஸர்

وَإِذْ قُلْنَا لِلْمَلَـٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ كَانَ مِنَ ٱلْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِۦٓ ۗ أَفَتَتَّخِذُونَهُۥ وَذُرِّيَّتَهُۥٓ أَوْلِيَآءَ مِن دُونِى وَهُمْ لَكُمْ عَدُوٌّۢ ۚ بِئْسَ لِلظَّـٰلِمِينَ بَدَلًا ﴿٥٠﴾

தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் தங்கள் இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் வானவர்களைச் சாராத ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த இப்லீஸ் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்துவிட்டான். அவன் தன் இறைவனுக்குக் கட்டுப்படாமல் நடந்தான். -மனிதர்களே!- என்னை விட்டுவிட்டு உங்களுக்குப் பகைவர்களாக இருக்கின்ற அவனையும் அவனுடைய சந்ததியையும் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டீர்களா? எவ்வாறு உங்களின் பகைவர்களை உங்களுக்குப் பாதுகாவர்களாக ஆக்கினீர்கள்? அல்லாஹ்வை பாதுகாவலனாக ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஷைத்தானை பாதுகாவலனாக ஏற்படுத்திக்கொண்ட அநியாயக்காரர்களின் செயல் மிகவும் கெட்டதாகும்.