அல்-முக்தஸர்
ٱلْمَالُ وَٱلْبَنُونَ زِينَةُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَٱلْبَـٰقِيَـٰتُ ٱلصَّـٰلِحَـٰتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا ﴿٤٦﴾
செல்வமும் பிள்ளைகளும் உலக வாழ்வின் அலங்காரங்கள்தாம். அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவழித்தாலே அன்றி மறுமையில் செல்வத்தால் எந்தப் பயனும் இல்லை. நல்ல வார்த்தைகளும், செயல்களுமே அல்லாஹ்விடத்தில் நன்மையைப் பெற்றுத்தருவதில் இந்த உலகிலுள்ள அனைத்து அலங்காரங்களையும் விடச் சிறந்ததாகும். அதுவே மனிதன் எதிர்பார்ப்பவற்றில் மிகச் சிறந்ததாகும். ஏனெனில் உலக அலங்காரங்கள் அழிந்துவிடக்கூடியவையே. அல்லாஹ்வுக்குப் பிடித்தமான சொற்கள் மற்றும் செயல்களின் கூலியே நிலைத்திருக்கக்கூடியவை.