×

الكهف

வசனம் 42

அல்-முக்தஸர்

وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُشْرِكْ بِرَبِّىٓ أَحَدًا ﴿٤٢﴾

விசுவாசியின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நிராகரிப்பாளனின் தோட்டத்தின் பழங்களை அழிவு சூழ்ந்துகொண்டது. அதனைக் கண்ட அவன் அதனைப் பராமரிப்பதற்காக செலவிட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு கைபிசைந்து நின்றான். திராட்சை மரத்தின் கிளைகள் அழிந்து அத்தோட்டம் அடியோடு வீழ்ந்து கிடந்தது. அவன் கூறினான்: “நான் என் இறைவனை மட்டுமே நம்பிக்கைகொண்டிருக்க வேண்டுமே! வணக்கத்தில் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!