அல்-முக்தஸர்
سَيَقُولُونَ ثَلَـٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًۢا بِٱلْغَيْبِ ۖ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ ۚ قُل رَّبِّىٓ أَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ ۗ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَآءً ظَـٰهِرًا وَلَا تَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًا ﴿٢٢﴾
அவர்களின் சம்பவத்தில் அவர்களின் எண்ணிக்கையைக்குறித்து யூகம் செய்து கூறுபவர்களில் சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் மூன்று பேர். நான்காவது அவர்களின் நாய் என்று.” சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் ஐந்து பேர். ஆறாவது அவர்களின் நாய் என்று.” இரு பிரிவினரும் ஆதாரமின்றி அனுமானத்தின் படியே கூறுகிறார்கள். அவர்களில் சிலர், “அவர்கள் ஏழு பேர். எட்டாவது அவர்களின் நாய்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “என் இறைவனே அவர்களின் எண்ணிக்கையை நன்கறிந்தவன். அல்லாஹ் கற்றுக்கொடுத்த சிலரைத் தவிர வேறு யாரும் அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள். அவர்களின் எண்ணிக்கையைக் குறித்தோ, அவர்களது நிலைமைகளில் மற்ற விஷயங்களைக்குறித்தோ வேதக்காரர்களிடமோ அவர்களைத் தவிர மற்றவர்களிடமோ வெளிப்படையாக அன்றி ஆழமாக விவாதம் செய்யாதீர். அவர்கள் குறித்து அல்லாஹ் உமக்கு இறக்கிய வஹியை போதுமாக்கிக் கொள்வீராக. அவர்களைக் குறித்த விபரங்களை வேறு யாரிடமும் நீர் கேட்காதீர். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அதனை அறியமாட்டார்கள்.