அல்-முக்தஸர்
وَرَبَطْنَا عَلَىٰ قُلُوبِهِمْ إِذْ قَامُوا۟ فَقَالُوا۟ رَبُّنَا رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ لَن نَّدْعُوَا۟ مِن دُونِهِۦٓ إِلَـٰهًا ۖ لَّقَدْ قُلْنَآ إِذًا شَطَطًا ﴿١٤﴾
நம்பிக்கை மற்றும் அதில் உறுதியைக் கடைபிடித்தல் மூலம் அவர்களின் உள்ளங்களைப் பலப்படுத்தினோம். மேலும் நிராகரிக்கும் அரசனுக்கு முன்னிலையில் எழுந்து அல்லாஹ்வை மாத்திரமே நம்புவோம் என தமது நம்பிக்கையை அறிவித்து நாட்டைத் துறப்பதற்கான பொறுமையின் மூலமும் அவர்களின் உள்ளங்களை பலப்படுத்தினோம். அவர்கள் அரசனிடம் கூறினார்கள்: “எங்கள் இறைவனின் மீது நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவனையே நாங்கள் வணங்கினோம். அவன்தான் வானங்கள் மற்றும் பூமியை படைத்துப் பராமரிக்கும் இறைவன். அவனைத் தவிர பொய்யாக கருதப்படக்கூடிய கடவுள்கள் யாரையும் நாங்கள் ஒருபோதும் வணங்க மாட்டோம். -அவனைத் தவிர மற்றவர்களை நாம் வணங்கினால்-, சத்தியத்தை விட்டு தூரமான, அநீதியான வார்த்தையை நாம் கூறியதாகிவிடும்.”