×

الإسراء

வசனம் 99

அல்-முக்தஸர்

أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ قَادِرٌ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَّا رَيْبَ فِيهِ فَأَبَى ٱلظَّـٰلِمُونَ إِلَّا كُفُورًا ﴿٩٩﴾

மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவர்கள், பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் இவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அறியவில்லையா? மிகப் பெரும் படைப்புகளைப் படைக்க சக்திபெற்றவன் அவற்றைவிட சிறிய படைப்புகளைப் படைப்பதற்கு சக்தியுள்ளவனே. அல்லாஹ் இவ்வுலகில் அவர்களுக்கு குறிப்பிட்ட தவணையை ஏற்படுத்தியுள்ளான். அந்த தவணை வந்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்துவிடும். அவன் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஒரு தவணையை ஏற்படுத்தியுள்ளான். அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. மீண்டும் எழுப்பப்படுவதற்குரிய தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இணைவைப்பாளர்கள் மறுக்கிறார்கள்.