×

الإسراء

வசனம் 97

அல்-முக்தஸர்

وَمَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُمْ أَوْلِيَآءَ مِن دُونِهِۦ ۖ وَنَحْشُرُهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ عَلَىٰ وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا ۖ مَّأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ كُلَّمَا خَبَتْ زِدْنَـٰهُمْ سَعِيرًا ﴿٩٧﴾

யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவர். -தூதரே!- யாரை அல்லாஹ் கைவிட்டு, வழிகெடுத்துவிடுவானோ அவர்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டும், அவர்களை விட்டும் தீங்கினை அகற்றும், அவர்களுக்கு நன்மையளிக்கும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். நாம் மறுமை நாளில் அவர்களை ஒன்றுதிரட்டுவோம். அவர்கள் முகங்குப்புற இழுத்து வரப்படுவார்கள். அவர்களால் பார்க்கவோ பேசவோ கேட்கவோ முடியாது. அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதன் நெருப்பு தணியும் போதெல்லாம் அதனை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்வோம்.