×

الإسراء

வசனம் 93

அல்-முக்தஸர்

أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِى ٱلسَّمَآءِ وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَـٰبًا نَّقْرَؤُهُۥ ۗ قُلْ سُبْحَانَ رَبِّى هَلْ كُنتُ إِلَّا بَشَرًا رَّسُولًا ﴿٩٣﴾

அல்லது உமக்கு தங்கத்தால் அல்லது அது போன்ற வேறொன்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது நீர் வானத்தில் ஏற வேண்டும். நீர் வானத்தில் ஏறினால் மட்டும் போதாது. அங்கு சென்று அல்லாஹ்விடமிருந்து ஒரு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அதில் நீர் அவனுடைய தூதர் என்று எழுதப்பட்டிருப்பதை நாங்கள் படிக்க வேண்டும். அதுவரை நிச்சயமாக உம்மை ஒருபோதும் தூதர் என நம்ப மாட்டோம். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் இறைவன் பரிசுத்தமானவன். மற்ற தூதர்களைப்போல நானும் ஒரு மனித தூதரே. எதையும் கொண்டுவர நான் சக்திபெற மாட்டேன். பிறகு எப்படி நீங்கள் கூறியதையெல்லாம் என்னால் கொண்டுவர முடியும்?