×

الإسراء

வசனம் 85

அல்-முக்தஸர்

وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلرُّوحِ ۖ قُلِ ٱلرُّوحُ مِنْ أَمْرِ رَبِّى وَمَآ أُوتِيتُم مِّنَ ٱلْعِلْمِ إِلَّا قَلِيلًا ﴿٨٥﴾

தூதரே!- வேதக்காரர்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் ஆன்மாவின் உண்மை நிலையைக்குறித்து உம்மிடம் வினவுகிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “ஆன்மாவின் உண்மை நிலை குறித்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அல்லாஹ்வின் அறிவுடன் ஒப்பிடுகையில் உங்களுக்கும் படைப்புகள் அனைத்திற்கும் சிறிதளவேதான் அறிவு வழங்கப்பட்டுள்ளது.