அல்-முக்தஸர்
وَإِن كَادُوا۟ لَيَسْتَفِزُّونَكَ مِنَ ٱلْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا ۖ وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَـٰفَكَ إِلَّا قَلِيلًا ﴿٧٦﴾
நிராகரிப்பாளர்கள் உம்மை மக்காவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக தங்களின் பகைமையால் உம்மைத் துன்புறுத்த முயன்றார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் நீர் புலம்பெயரும் வரை உம்மை அவர்கள் வெளியேற்றாமல் அவர்களை அவன் தடுத்தான். அவர்கள் உம்மை வெளியேற்றியிருந்தால் உமக்குப் பின்னர் சிறிது காலமே அன்றி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.