×

الإسراء

வசனம் 59

அல்-முக்தஸர்

وَمَا مَنَعَنَآ أَن نُّرْسِلَ بِٱلْـَٔايَـٰتِ إِلَّآ أَن كَذَّبَ بِهَا ٱلْأَوَّلُونَ ۚ وَءَاتَيْنَا ثَمُودَ ٱلنَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا۟ بِهَا ۚ وَمَا نُرْسِلُ بِٱلْـَٔايَـٰتِ إِلَّا تَخْوِيفًا ﴿٥٩﴾

தூதரை உண்மைப்படுத்த இணைவைப்பாளர்கள் கோரும் இறந்தவர்களை உயிர்ப்பித்தல் போன்ற பௌதீக சான்றுகளை நாம் இறக்காமல் இருப்பது, நாம் முந்தைய சமூகங்களின் மீது அவற்றை இறக்கியும் அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரித்து விட்டார்கள் என்பதானால்தான். நாம் ஸமூத் சமூகத்திற்கு பெண் ஒட்டகம் என்னும் மிகப் பெரும், தெளிவான சான்றை இறக்கினோம். அவர்கள் அதனை நிராகரித்தார்கள். நாம் அவர்களை உடனடியாகத் தண்டித்தோம். நாம் தூதர்களுக்கு சான்றுகளைக் கொடுத்து அனுப்புவது அவர்களது சமூகத்தை அச்சுறுத்துவதற்கே. அவர்கள் அதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாமல்லவா.